முகமாலையில் மீள்குடியமர்வு டிசம்பரில் – பதிவுகளை மேற்கொள்ள பணிப்பு!

Saturday, November 19th, 2016
போரினால் கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த பச்சிலைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பளை, முகமாலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அடுத்தமாதம் 1ஆவது வாரத்தில் அந்தந்தப் பகுதிகளில் குடியமர்த்தப்படவுள்ளனர் எனப் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்தாவது:
போர்ச் சூழல் காரணமாக 1996ஆம் ஆண்டும்ஈ 2000ஆம் ஆண்டும் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு மிதிவெடிகள் தடைகளாகக் காணப்பட்டன. இந்த நிலையில் முகமாலை, வேம்பாடுகேணி ஆகிய பிரதேசங்களுடன் இந்திராபுரத்தின் ஏ-9 வீதியில் இருந்து 200மீற்றர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு மிதிவெடி அகற்றும் பிரிவினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மக்களை மீள்குடியேற்றுவதற்கான பதிவுகளைக் கிராம அலுவலர்கள் செய்து வருகின்றனர். முகாமையில் 55 குடும்பங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதோர் உடன் அவற்றை மேற்கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மிள்குடியேற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது –என்றார்.
 25349-11_8_118200730730123_11

Related posts: