முகநூலில் பரப்புரைகளுக்குத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு !
Saturday, January 6th, 2018
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முடியாது. சமூக வலைத்தளங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய முடியும்.
இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிலர் பரப்புரைகளில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது. இது சட்டவிரோதமானதாகும். வாக்குகள் மூலம் பெண்கள் தெரிவு செய்யப்படாவிட்டாலும் வெகுமதி முறையின் மூலம் அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வ...
நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் இன்று முக்கிய கூட்டம்!
பாதுகாப்பு தரப்பினர் பீரங்கிகளை மட்டுமல்ல மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்கள் - நாட்டு மக்களை பாதுகாக்க...
|
|
|


