முகத்தை மறைக்கும் ஆடை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

Thursday, May 16th, 2019

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும், பொது இடத்தில் வைத்து, தமது அடையாளம் வெளிப்படுவதைத் தவிர்க்கும் வகையில், முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் உள்ளிட்ட வேறு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான முகம் என்பது, நெற்றி முதல் தாடை வரையும் மற்றும் இரண்டு காதுகளுக்கும் இடையிலான பகுதி என்பன வெளியில் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


நுண்நிதி நிறுவனங்களால் வடக்கில் பாதிப்பு அதிகம்- 1.5 இலட்சத்துக்குக் குறைவாக கடன்பெற்றோருக்கு சலுகை!
நான்கு நாள் பயணமாக சீனாவின் உயர் அதிகாரி இலங்கை வருகை – இலங்கையின் உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துர...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும...