முகக்கவச ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – சுங்கத் திணைக்கள ஊடக பேச்சாளர்!
Monday, April 13th, 2020
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் முகக் கவசங்கள் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்ய முடியுமென சுங்கத் திணைக்கள ஊடக பேச்சாளரும் மேலதிக பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு அமைய சமீபத்தில் முகக்கவசங்களை ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.
இருப்பினும், இதன் காரணமாக குறித்த முகக்கவச தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, தரமான முக்கக்கவசங்களை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 20,000 முறைப்பாடுகள் - விசேட ஆணைக்குழுவின் தலைவர்!
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் குறைந்துள்ளத...
|
|
|


