மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்!

வடக்கில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோது பாதுகாப்பு தரப்பினரின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்
மீள்குடியேற்றத்தின்போது இயற்கையை பாதுகாப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்
இந்த சந்திப்பில் காவல்துறைமா அதிபர் உட்பட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்
.
Related posts:
சங்கானை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நோயாளர்கள் பெரும் அவதி!
கொரோனா வைரஸ்: பாரிய அழிவுகளை உலகம் சந்திக்கும் - - பிரபல விஞ்ஞானி !
ரஷ்யா - உக்ரைன் போர் இலங்கைக்கு சாதகமாக உள்ளது - ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தெரிவிப்பு...
|
|