மீன் உற்பத்தி தொடர்பில் சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்!

Monday, July 3rd, 2017

இலங்கை கடற்பரப்பில் மீன் உற்பத்தியை மேற்கொள்வதில் முதலீடு செய்ய சீன முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சியுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர்கள் இவ்வாறு விருப்பம் தெரிவித்தனர்.

மீன் உற்பத்திக்குத் தேவையான அறிவும் தொழில்நுட்பமும் தம்மிடம் இருப்பதாக சீன முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில் முயற்சியில் முதலீடு செய்வதற்கு தாம் தயாரென்றும் அவர்கள் கூறியுள்ளனர்

கடலில் மீன் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஆர்வத்தையும் விட மீன் உற்பத்திக்காக காட்டும் ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளதென இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். கடல் வளங்கள் மிகவும் குறைந்து வருவதால் கடலிலும் ஏனைய நீர் நிலைகளிலும் மீன் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுமாறு அவர் சீன முதலீட்டாளர்களை கேட்டுள்ளார்.  இவ்வாறான முதலீடுகளுக்குத் தேவையான காணி உள்ளிட்ட வசதிகளை வழங்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தொவித்துள்ளார்.

Related posts: