மீன்களின் விலை அதிகரிப்பு – இடைத்தரகர்களின் அபகரிப்பு வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை!

Wednesday, July 26th, 2023

இடைத்தரகர்களதும் ஏற்றுமதியாளர்களதும் நலனுக்காக யாழ் மாவட்டத்தின் அநேக மீன் பொதுச் சந்தைகளில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டிவரும் நிலையில் தற்போது தெருவோர சிறிய வியாபாரிகளும் இத்தகைய நிலையால் தங்களால் வாழ்வாதாரத்துக்கான பொருளாதாரத்தை ஈட்டமுடியாத நிலை உருவாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்..

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து நாட்டின் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்வடைந்தது போன்று கடலுணவுகளின் விலையும் சடுதியாக அதிகரித்தது.

குறிப்பாக 700 முதல் 1000 ரூபாவுக்கு உள்ளான விலைகளில் விற்பனை செய்யப்பட்ட தரமான கடலுணவுப் பொருட்கள் தற்போது 2000 முதல் 2500 ரூபாவரை விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாகவும் எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் கடலுணவுப் பொருட்களின் விலைகள் சந்தகைளில் சற்றேனும் குறைவதாக இல்லை என்பதுடன் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையே காணப்படுவதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனரர்.

உள்ளூர் நுகர்வோரை ஓரங்கட்டி அல்லது அவர்களுக்கு கடலுணவுகளை வழங்காது வெளியூர் மொத்த வியாபாரிகளுக்கு அல்லது ஏற்றுமதியாளர்களுக்கு என தரமான கடலுணவுகளை அதிகரித்த விலைகளில் போட்டி வியாபாரமாக வழங்குவதற்கு இடைத்தரகர்களாக இருக்கும் தரப்பினரே  பிரதான காரணமாக உள்ளதாகவும் நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் எந்தவொரு பிரதேசத்திலும் அந்தந்த பிரதேச மக்களின் நலன்களை அல்லது தேவைகளை  கருத்திற்கொண்ட பின்னரே வெளிப் பிரதேசங்களின் நலன்கள் தொடர்பில் அவதானத்தில் கொள்வது வழமை.

ஆனால் கடலுணவு வியாபாரத்தில் அரசாங்ம் அனைத்து வகையான நிவாரணங்களையும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வரும் நிலையிலும் அந்த சலுகையூடான உணவுப் பொருட்கள் உள்ளூர் நுகர்வோருக்கு கிடைக்காதிருப்பது வேதனைதருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்மைய நாள்களில் குறிப்பாக ஆலயங்கள் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் கூட கடலுணவுகளின் விலை 2 ஆயிரத்தை தாண்டியே காணப்படுகின்றது.

கடலுக்கு சென்று கடலுணவை பிடித்துவரும் தொழிலாளர்கள் நியாயமான விலையில் தான் சந்தைகளில் தமது அறுவடைப் பொருட்களை விற்பனை செய்கின்றதை அவதானிக்கின்ற போதிலும் இடைத்தரகர்களாக பல வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்து மீன்களை தட்டுப்பாடாக காண்பித்து நூகர்வோருக்கு அதிக விலையில் விற்பனை செய்யும் ஒரு தந்திரமான அபகரிப்பு வியாபாரமாக கடலுணவு வியாபாரம் மாறியுள்ளதாக மீன் சந்தகைளுக்கு வரும் நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக இந்த நடைமுறை சந்தைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடமும் தற்போது அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது

அந்தவகையில் கடலுணவுகளை அறுவடை செய்யும் தொழிலாளர்களை விட இடைத்தரகர்கள் இரு மடங்கு இலாபத்தை பெறும் இந்த அபகரிப்பு வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் தெருவோர மின்’ வியாபாரிகளும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: