மீனவர் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு!

சர்ச்சைக்கரிய இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளும் நோக்கில் நாளைய தினம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 13 மீனவ பிரதிநிதிகளும், இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வன்னி ஆகிய பகுதிகளில் இருந்து 13 மீனவ பிரதிநிதிகளும் குறித்த சந்திப்பில் கலந்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுப்படும் இந்தியர்கள் மற்றும் இந்திய கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுப்படும் மீனவர்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
இரட்டைக் குடியுரிமை பெற அதிகமானோர் விண்ணப்பம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: சிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பி...
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!
|
|