இரட்டைக் குடியுரிமை பெற அதிகமானோர் விண்ணப்பம்!

Tuesday, June 26th, 2018

இலங்கையில் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

இதற்காக ஒரு மாதத்தில் சுமார் 1000 விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இவை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 800 பேருக்கு ஜீலை முதல் வாரத்தில் இரட்டைக்குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போருக்கான கட்டணம் 3 இலட்சம் ரூபாய் என்பதுடன் அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கான கட்டணம் 50,000 ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: