மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Monday, November 12th, 2018

வங்காளவிரிகுடாவின் மத்தியில் “கஜா” சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும்.

மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், “கஜா” சூறாவளியானது வங்காளவிரிகுடாவின் மத்தியில் தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, பலம் மிக்க சூறாவளியாக மாற்றமடையும். இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், பின்னர் தென் மேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: