இயற்கை அனர்த்தங்களால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது – மத்திய வங்கி ஆளுனர்!

Monday, October 3rd, 2016

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு காலப்பகுதியில் வறட்சி, மழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை அனர்த்தங்களினால் இவ்வாறு பொருளாதார வளர்ச்சி மத்தமடைந்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எய்தப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்து திருப்தி கொள்ள முடியாது.

மழை வெள்ளம் மற்றும் வறட்சி காரணமாக விவசாயம், கைத்தொழில் நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீதம் அல்லது அதனை விடவும் சற்றே கூடிய பெறுமதியை பதிவு செய்யும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

HkDDczm

Related posts: