மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
Thursday, December 1st, 2016
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினனால் எதிர்வரும் 28 மணித்தியாலங்களுக்கு கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள், அவதானமாக செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்தள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை பொத்திவிலிலிருந்து சுமார் 750 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது வடமேல் மாகாணத்தின் ஊடாக தென்னிந்தியா நோக்கி நகரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வானம் அதிகளவு மேக மூட்டங்களை கொண்டதாக காணப்படும்.கடற் பிரதேசத்தில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
கடல் பிரதேசங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் எனவும், இது தொடர்பில் மீனவர்கள், அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
|
|
|


