மீண்டும் வாகனங்கள் பதிவு அதிகரிப்பு!

Sunday, August 28th, 2016

நாட்டில் மீண்டும் வாகனங்கள் பதிவு நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றிற்கு 1858 வாகனங்கள் பெருந்தெருக்கள் ஊடாக இணைந்து கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைக்கமைய கடந்த வருடத்தில் 668907 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கார்கள் 105628 முச்சக்கர வண்டிகள் 129547, மோட்டார் சைக்கிள்கள் 370889, கெப் வாகனங்கள் 26899 என வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.அதற்கமைய மாதத்திற்கு 55742 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வரலாற்றிலே கடந்த வருடம் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆறு வருடத்தில் வாகன பதிவுகள் 325 வீதத்திற்கும் அதிகமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் பெப்ரவரி மாதத்தில் 32801 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்ட போதும் வாகன இறக்குமதிகளில் குறைவு ஏற்படவில்லை என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts:

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அக்கறை - அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன - வெளிவ...
அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழ...