மீண்டும் புகையிரத பணியாளர்கள் சேவைப் பணிப்புறக்கணிப்பு!
Tuesday, November 7th, 2017
தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கிய பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சங்கங்கள் பல இணைந்து நாளை (08) நள்ளிரவு முதல் 48 மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை தமக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை புகையிரத கட்டுப்பாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே மேற்குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த நிலையில், போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை: வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கு...
கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா!
அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை - அரச வங்...
|
|
|


