தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை: வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

Sunday, September 24th, 2017
தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே,  இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி வடக்கு வாழ் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள அனைத்துத் தரப்பினரும் இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று சனிக்கிழமை(23) முற்பகல்- 10 மணி முதல் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் இடம்பெற்ற போது  வட மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் பொதுமக்கள்  செறிந்து காணப்படும் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்காண்பதற்காக சி.சி.ரி  கமராக்களைப்  பொருத்துவதற்கு ஆலோசித்துள்ளோம். அதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அனுமதியற்ற வகையில் வீதியோரங்கள் மற்றும் மரங்களின் கீழ் ஆங்காங்கே சிலைகள் அமைக்கப்பட்டு வருவது தொடர்பில் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related posts: