விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்!

Friday, May 24th, 2019

வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்குத் தலா 20 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோர், முழுநேர விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவராகவும், பெற்றோரில் ஒருவராவது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏதாவது கமக்கார அமைப்பில் இருக்க வேண்டும். அத்துடன் 2020 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பின்வரும் தகைமை உடைய விண்ணப்பதாரிகள் தமக்குரிய கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, பெற்றோர் அங்கத்தவராக இருக்கும் கமக்கார அமைப்பு, பிரிவுக்கு பொறுப்பான கிராம அலுவலகர் மற்றும் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் ஆகியோரின் பரிந்துரையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையாளர் இ.நிஷாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: