மீண்டும் நுரைச்சோலை மின்உற்பத்தி ஆரம்பம்!
Tuesday, November 21st, 2017
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் கடந்த 2 வாரகாலமாக செயலிழந்திருந்தது. இதில் ஒரு இயந்திரம் மீண்டும் வழமைபோன்று செயற்படவுள்ளது. இதனால் 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான அமைச்சின் ஊடகப்பேச்சாளர் லக்ஸ்மன் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
திருத்தல் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக இரண்டு இயந்திரங்களின் மூலமான மின்உற்பத்தி நவம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.இதில் ஒரு இயந்திரம் தற்பொழுது மீண்டும் செயற்படக்கூடியதாக அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் - ஒரேநாளில் 31 பேர் பலி - சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவ...
சிலாபம், தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் 2,467 கிலோ பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்!
கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சில தினங்களில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசில் ப...
|
|
|


