மீண்டும் திரும்புவோம் என்று  நம்பிக்கையிழந்து இருந்தோம் – கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள்!

Friday, March 17th, 2017

சில தினங்களுக்கு முன்னர் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள 8 இலங்கையர்களுகம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களில் ஒருவரான கப்பலின் பிரதம பொறியியலாளர் ஜயந்த கலுபோவில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சோமாலிய பாதுகாப்பு பிரிவினர் தமக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும், கப்பலை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது தங்களை பாதுகாப்பாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பவுன்ட்லன்ட் (Puntland) நாட்டின் கரையோரப் பகுதியில் உள்ள விசேட படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக தாம் மீட்கப்பட்டதாகவும்” கடத்தப்பட்ட கப்பலில் இருந்த பொறியியலாளர் ஜயந்த களுபோவில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கப்பலில் இருந்த எட்டு இலங்கையர்களும் பொசாசோ (BOSASO) துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எந்த கோரிக்கையுமின்றி விடுவிக்கப்பட்ட குறித்த கப்பலில் இருந்தவர்கள் எவ்வித அசெளகரியமும் இன்றி உள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பவுன்ட்லன்ட் (Puntland) ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: