மீண்டும் தலைத்தூக்கும் கொவிட் – புதிதாக பலர் அடையாளம்!
 Thursday, April 27th, 2023
        
                    Thursday, April 27th, 2023
            
கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றானது குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதானது ஆபத்தான விடயம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விவசாய அபிவிருத்திக்கு 160 வேலைத் திட்டங்கள்!
நாளை காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவும் வாய்ப்பு  - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        