மீண்டும் ஒத்துழைப்பை தாருங்கள்: அனைத்து தரப்பினரிடமும் சுகாதார அமைச்சர் வேண்டுகோள்!

Sunday, October 4th, 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு கடந்த காலங்களைப் போன்று மீண்டும் ஒத்துழைப்பை வழங்குமாறு நாட்டுமக்களிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்தள்ளார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில் –

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம், கொ​ரோனா தொற்றை ஒழிப்பதற்காக அதிகம் முக்கியதுவம் வழங்கியமைக் காரணமாக, ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக கொரோனா ஒழிப்பு விடயத்தில் இலங்கை விளங்கியது. நாமும் கொரோனா தொற்றிலிருந்து விரைவாக மீண்டோம்.

இதேவேளை இன்று, ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். எனவே ஏனையோருக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் மக்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதுடன்,   அதிக சனநெருக்கடி மிக்க பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்தள்ள சுகாதார அமைச்சர் இந்நோயை கட்டுப்படுத்த கடந்த காலங்களில் போன்று மீண்டும் ஒத்துழைப்பை தாருங்கள் என அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது

Related posts: