மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் இயற்கை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, May 29th, 2018

நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பாரப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு கடும் காற்று வீட கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதிகளில் காற்று 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என கூறப்படுகின்றது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பிரதேசங்களிலேயே இவ்வாறு காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலைமை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டத்திலும் இன்றைய தினம் மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: