பிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள்!

Tuesday, April 18th, 2017

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெங்கு தீவிர சத்திர சிகிச்சை பிரிவுகளையும், டெங்கு நோயாளர்களுக்கான வோர்ட் தொகுதிகளையும் அமைக்குமாறு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதான வைத்தியசாலைகளான கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, பாணந்துறை வைத்தியசாலை, மற்றும் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலை ஆகியன இதற்காக மேல் மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கராப்பிட்டிய பெரியாஸ்பத்திரியும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் இந்தப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் தீவிர சிகிச்சைப் பிரிவும் வோர்ட்டுக்களும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக பதிவாகியுள்ளது. தற்போது 7 மாவட்டங்களில் டெங்கு நோய் காணப்படுகின்றது. பாடசாலை விடுமுறையின் பின்னர், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை எதிர்வரும் 24ம் திகதி நடத்துவதற்கும் தீரமானிக்கப்பட்டுள்ளது.

Related posts: