உக்ரைனில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் – உக்ரைனுக்கான இலங்கை தூதரகம் அறிவிப்பு!

Sunday, February 27th, 2022

உக்ரைனில் வசிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இலங்கை பிரஜைகளை போலந்து ஊடாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரைனுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை எல்லைப் பகுதிகளுக்கு அறிவித்துள்ளதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் M.R.ஹசன் குறிப்பிட்டார்.

அத்துடன் 14 மாணவர்கள் உள்ளிட்ட 76 இலங்கையர்கள் உக்ரைனில் வசித்ததாக அவர் கூறினார்.

வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய, அவர்களில் 8 மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் உக்ரைனிலிருந்து, இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

மேலும் 9 இலங்கையர்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக உக்ரைன் நெருக்கடி தீவிரமடையும் முன்னரே அங்கிருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

உக்ரைன் வான் மார்க்கங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள இலங்கையர்கள் போலந்து சென்று அங்கிருந்து இலங்கை வர முடியும்.

இதனிடையே, உக்ரைனில் தற்போது நிலவும் பதற்றநிலை காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

உக்ரைனில் வசிக்கும் இலங்கையர்களுக்காக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தில், 24 மணித்தியாலங்களும் இயங்கும் உடனடி அழைப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 00 90 534 456 94 98 அல்லது 00 90 312 427 10 32 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தூதரகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் முடியுமென வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஒதுக்கப்பட்ட நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுங்கள் - அனைத்து அரச நிறுவனங்களிடமும் நிதி அம...
ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம் - சுகாதார அமைச்சர்!
எந்தவொரு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது - பொருட்களின் விலையினை உயர்த்த முற்பட்டால்...