மீண்டும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட எம்.எஸ்.ஜி. இரசாயனம்!

Saturday, April 28th, 2018

இலங்கைக்கு, தடைசெய்யப்பட்ட கிளைபோசேட் ரக எம்எஸ்ஜி ரசாயனம் கலந்த சுவையூட்டிகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்க மருத்துவர்கள் சங்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் கிளைபோசேட் ரசாயன வகை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு கிளைபோசேட் ரசாயனத்தின் மூலக்கூறுகள்அடங்கிய எம்எஸ்ஜி சுவையூட்டிகள் அதாவது அஜினமோட்டோ சுவையூட்டிகள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை புள்ளிவிபரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

இலங்கைக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் எம்எஸ்ஜி சுவையூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றினை விவசாயிகள் களைநாசினிகளாகபயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சுவையூட்டிகளை அதிகளவில் உட்கொள்வதால் அதிக பருமன் மற்றும் நீரிழிவு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதே போன்று விவசாயத்தில்பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு வியாதி ஏற்படலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

Related posts: