மின் விநியோகத்தில் எவ்வித தடையும் இல்லை!
 Sunday, September 17th, 2017
        
                    Sunday, September 17th, 2017
            
மின்சார சபை ஊழியர்கள், கடந்த 13ம் திகதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், எந்தவொரு இடையூறும் இன்றி மின்சாரத்தை விநியோகிக்கக் கூடியதாக உள்ளதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி மற்றும் மின் பரிமாற்றத்தில், 100% திறன் காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ள அதேவேளை, ஒரு சில இடங்களில் மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்ட போதும், 65% மின்விநியோகம் முழுமையாக நடைபெற்று வருவதாகவும், அமைச்சின் ஊடகப்பேச்சாளர் பெதும் பஸ்குவால் கூறியுள்ளார்.
தேசிய வைத்தியசாலையிலுள்ள நோயாளிகளின் உயிரைப் பணயம் வைக்கும் முகமாக, அங்கு பணியாற்றும், இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான ஊழியர்களையும், மின்சார சபை தொழிற்சங்கம், போராட்டத்துக்காக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, தங்களது வேலைநிறுத்தப்போராட்டம் வெற்றி கண்டுள்ளதாகவும் அமைச்சர் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் மின்சார சபை தொழிற்சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் கூறியுள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        