இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி !

Thursday, August 31st, 2017

நாட்டில் அரிசியின் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்தது

70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியும், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் சம்பா அரிசியும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள தனியார் துறையினரிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.இறக்குமதி செய்யப்படும் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்தது.

Related posts: