மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அறிகுறி – இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை!

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்வெட்டை நிறுத்துவதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் தொடர்ந்து மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டாலும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் கிடைக்காததால் மக்கள் வழமையான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்த பழகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்தம்150 ரூபா கொடுப்பனவு!
கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாமையைத் தெளிவுபடுத்தும் க...
தணிக்கைகள் மூலமாக அல்ல, மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும் - ஊடகத்துறை அமைச்ச...
|
|