கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாமையைத் தெளிவுபடுத்தும் கவனயீர்ப்புப் போராட்டம்!

Thursday, February 9th, 2017

கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாமையைத் தெளிவுபடுத்தும் கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்.மாவட்டப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களால் நேற்றுபுதன்கிழமை(08) இடம்பெற்றது.

யாழ்.வீரசிங்கம் மண்டப முன்றலில் யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச் சபைத் தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில்  ‘நல்லாட்சி அரசே நடைமுறைச் சாத்தியமா உன் கட்டுப்பட்டு விலை’, ‘கட்டுப்பாட்டு விலையா? கற்பனை விலையா?’, ‘கொள்விலையை விட விற்பனை விலையைக் குறைக்க முடியுமா?’, ‘மொத்த விலையை விடச் சில்லறை விலையைக் குறைக்க முடியுமா?, ‘சிட்டையிட்டால் நியாய விலைக்கும் தண்டனை… சிட்டை இடாவிட்டால்???’ போன்ற பல்வேறு பாதாதைகளையும் தாங்கிக் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனிடம் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

unnamed

Related posts: