பாதீட்டில் உணவுக்கு உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, August 29th, 2022
சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தமுறை பாதீட்டில் உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் என்ற ரீதியில் இந்த பாதிப்புக்கு தாமும் பொறுப்பேற்கின்றோம்.
இந்தநிலைமையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கான நிவாரணம் வழங்க இந்த பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள, கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்!
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை!
கால்நடைகளுக்கு தீவனமாக மாறும் 4 இலட்சம் கிலோ பால் மா!
|
|
|


