மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!
Saturday, February 12th, 2022
மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்திய முப்படை தளபதியின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரங்கல்!
இந்தியா - இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை - இலங்கைக்கான இந்திய உயர் ஸ...
நல்லூர் பகுதி சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபா - மக்கள் குற்றச்சாட்டு!
|
|
|


