மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள் – அது தவறான செயல் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்து!

Sunday, February 6th, 2022

காஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது அதிகமானோர் என்னை விமர்சித்தார்கள் என சுட்டிக்காட்டிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தற்போது காஸ் வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? முகநூலில் உள்ள அனைத்து ஜே.வி.பிகாரர்களும் என்னைக் குற்றம் சாட்டத் தொடங்கினர். கெட்ட வார்த்தையில் அவர்கள் என்னை ஏசினார்கள். முகநூல் ஊடாக ஜேவிபியின் ஒழுக்கத்தை நீங்கள் நன்றாகக் கவனிக்கலாம். மின்சாரத்திலும் இதே போன்ற பிரச்சினை உள்ளதுஎன்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – இந்த மின் நெருக்கடிக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்பதை மக்கள் உணரவில்லையா? இதன் பின்னணியில் சதி உள்ளது. ஜனாதிபதியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இடமளிப்பதில்லை. இந்த விடயங்களுக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது.

காஸ் வெடிப்பு விவகாரம் வெளியில் வந்தது போன்று இந்த விடயங்களும் எதிர்காலத்தில் வெளிச்சத்துக்கு வரும். நமது ஜனாதிபதி இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொலிஸார் சாமர்த்தியமாக அவற்றையெல்லாம் பறை சாற்றாமல் அம்பலப்படுத்துவர். இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கு கூறுகின்றோம்.

இதன் பின்னணியில் முழுமையாக சூழ்ச்சி காணப்படுகிறது. நாங்கள் தேர்தலை எதிர்கொண்டு மக்களின் விருப்பத்திற்கு இடமளிப்போம். மக்களை கொன்று பிணங்களை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்காதீர்கள். மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள். அவை தவறான செயல்களாகும் எனவும் ஆளும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கி அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் வரவுசெலவுத் திட்ட ஒரு இலட்சம் கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அண்மையில் நிக்கவெரட்டியவில் நடைபெற்றது. குருநாகல் மாவட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அமைச்சர், தேர்தல் வரும்போது இந்த பேச்சுக்கள் எல்லாம் குறையும். ஏனெனில் தேர்தல் இல்லாததால் இவ்வாறு தற்பெருமை அடிக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார்கள். கோத்தபாயவுடன் சஜித் பிரதமராவார் என்றார்கள். தேர்தல் முடிவுகள் வெளிவர மூன்று நாட்கள் பிடிக்கும் என்றார்கள்.இப்படி நிறைய விஷயங்களை சொன்னார்கள்.

இருப்பினும், தேர்தல் முடிவுகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். என்னை எவ்வளவு தான் தாக்கினாலும் அதனை எதிர்கொள்ளும் வலிமை எங்களிடம் உள்ளது. சில குறைபாடுகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து முன்னேறும் திறன் நமது அரசுக்கு உள்ளது. எங்களை எளிதில் வீழ்த்த முடியாது.

தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்தவர்தான் பெல்லன்வில கோவிலில் வெடிகுண்டு வைத்தவர். ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்தும் அதே மனிதர் தான். குண்டு வெடித்திருந்தால் தேசிய பாதுகாப்பு பற்றி கோத்தபாய பேசுவதில் பயனில்லை என்பார்கள். போலீசாரை பயன்படுத்தி இது தொடர்பில் ஆராயுமாறும் ஜனாதிபதி பணித்திருந்தார்.

யாரையும் தப்பிக்க விடாதீர்கள் என்று ஜனாதிபதி கூறினார். இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் சரியாகப் பார்க்க வேண்டும். அரசு வெடிகுண்டுகளை வைத்ததாக வதந்தி பரவியது.

கோத்தபாய ராஜபக்ச சரியான தலைவர். ஊழலற்ற இந்த நாட்டை சரியாக ஆட்சி செய்யும் தலைவர். இந்நாட்டு மக்களை அபரிமிதமாக நேசிக்கும் மக்களின் தலைவரும் ஆவார். அதனால்தான் தடுப்பூசி போடப்பட்ட உலகின் 6 ஆவது நாடாக வர முடிந்தது. தடுப்பூசி போடுங்கள், அரசியல்வாதிகள் அதற்கு உதவ வேண்டும் என்று அவர் எப்போதும் கூறினார். தடுப்பூசி வெற்றியடைய மகா சங்கத்தினரும் முக்கிய பங்காற்றினர். நம் நாடு பாதுகாக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டதால் இன்று நீங்களும் நானும் ஒன்றாக இருக்கிறோம். தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் இந்தியாவைப் போல மக்கள் வீதிகளில் விழுந்து இறந்திருப்பார்கள்.

சில அரசு அதிகாரிகள் தொலைக்காட்சியில் பேசியதை நாம் மறந்துவிடவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயல் இருந்ததால் நல்லது. சஜித் பிறமதாசவின் தந்தை இருந்திருந்தால் தொலைக்காட்சியில் பேசுபவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று பார்த்திருக்கலாம் . எரித்த இடத்தை கூட கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும் . நமது ஜனாதிபதி நாட்டை தந்திரோபாயமாக ஆட்சி செய்கிறார். அவரின் புண்ணியத்தில் இன்று உயிருடன் இருக்கிறோம். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லா செய்திகளும் உண்மையல்ல. எனவே மக்களை ஏமாற வேண்டாம் என்று கூறுகிறேன்.

குருநாகல் மாவட்டத்தில் சிறந்த அறுவடை கிடைத்தது. குருநாகலில் விவசாயிகள் பயிரிட்டனர். விவசாயிகளை அழிக்க நாங்கள் செயல்படவில்லை. மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் என்ற வகையில் இயற்கை உரம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். விவசாயிகளை ஜனாதிபதி கைவிடமாட்டார் அவர்கள்தான் எங்கள் பலம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: