மாகாணசபை உறுப்பினர்களின் ரஷ்ய விஜயத்தை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, September 27th, 2016

 

மத்திய மாகாணசபை உறுப்பினர்களின் ரஷ்ய விஜயத்தை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்வது குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் மத்திய மாகாணசபையின் இரண்டாம் குழுவினரது பயணத்தை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்கவிற்கு ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.பொதுமக்களின் பணம் இவ்வாறு பாரியளவில் விரயம் செய்யப்படும் பயணங்கள் தொடர்பில் தாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் ஏன் தமக்கு இது பற்றி அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு குழுக்களாக மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.இதில் 29 பேரைக் கொண்ட ஒர் குழு இன்று அதிகாலை ரஷ்யா நோக்கிப் பயணமாகியுள்ளது.

மற்றுமொரு குழு எதிர்வரும் 5ம் திகதி ரஷ்யாவிற்கு புறப்பட்டுச் செல்லவிருந்தது என மத்திய மாகாண ஆளுனர் நிலுகா தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்காமல் அனுமதியளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

russian plane(c)

Related posts: