மலையக அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சிச்  செய்தி!

Thursday, October 6th, 2016

முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது போல் 730 ரூபாய் எமக்கு வேண்டாம் பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1000 ரூபாவும் 6 நாள் வேலையும் எமக்கு வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை கிருஸ்லஸ்பாம் தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை கொட்டகலை கிருஸ்லஸ்பாம் மொர்ஷல் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த தோட்ட தொழிலாளர்கள் தமக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் தற்பொழுது வழங்கி வரும் தொழிற்சங்க சந்தாவை நிறுத்தி விடப்போவதாகவும் தெரிவித்தனர்.

தமக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் 6 நாள் தொழிலும் கிடைப்பதற்கான பேச்சுவார்த்தை இணக்கப்பாடு எட்டுமானால் தாம் போராட்டத்தை கைவிடுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கொட்டகலை டிரேட்டன் தோட்டத்திலும் போராட்டம் ஒன்று நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்திற்கு முன்பதாக இன்று காலை இடம்பெற்றது.

இந்த போராட்டத்திலும் கலந்து கொண்ட தொழிலாளர்கள் 730 ரூபாய் வேண்டாம் ஆயிரமே வேண்டும். 6 நாள் வேலை வேண்டும் என தப்பு அடி ஓசை மூலம் குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் ஹட்டன் எரோல் தோட்ட தொழிலாளர்கள், நோர்வூட் அயரபி மற்றும் பொகவந்தலாவ, பதுளை கிலேல்பீன் ஆகிய தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறு பேராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

DSC05185

Related posts: