மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி !

Friday, August 18th, 2023

100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

100 மெகாவாட் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 3 முக்கிய நிபந்தனைகளின் கீழ் 2023 ஒகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த மின்சார கொள்முதல் சிறப்புத் தகுதியின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் மற்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று முதல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கொத்மலை பொல்பிட்டிய 220 மஎ பாதை 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இரண்டாவது நிபந்தனையும் கொள்வனவு செய்யவுள்ள மின்சாரத்தை குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் கொள்வனவு வேண்டும் என்று மூன்றாவது நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: