மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி – இராணுவ தளபதி தெரிவிப்பு!
Friday, October 16th, 2020
மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த நிலையிலும், ஏனைய 58 பேரும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 05 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களின் விருப்பத்திற்கமையவே நாட்டை நிர்வகிப்பேன் – மஹந்த ராஜபக்ச!
உயிரிழப்புகள் தொடர்பிலான தரவுகளை வெளியிடும் போது சரியா இறுதிப்படுத்தப்பட்டதாக இருப்பது அவசியமாகும் -...
இலங்கையில் - எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!
|
|
|


