மினுவங்கொட கொத்தணியிலிருந்து மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அரச தகவல் திணைக்களம்!

மினுவங்கொட கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் 4 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,122 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2169 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்பதுடன், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 205 பேர், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
முப்படையினரால் நடத்தப்படும் 4 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 205 பேரே இவ்வாறு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|