மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நாநூறை அண்மித்துள்ளது!

Tuesday, October 13th, 2020

இலங்கையில் நேற்றையதினம் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டது. அவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களில் 50 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 10 பேர் குணமடைந்து நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 512 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இந்த கொடிய வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

Related posts: