காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் சாத்தியம்!

Friday, April 26th, 2019

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை அல்லது நாளை மறுதினம் புயலாக வலுப்பெறும் சாத்தியம் காணப்படுவதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு தற்பொழுது வலுவான தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.

நாளை அல்லது நாளை மறுதினம் இது புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி வட தமிழக கடற்கரையை நோக்கி நகருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

இந்த வலுவான தாழ்வு பகுதியானது வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருமாயின் எதிர்வரும் முப்பதாம் மற்றும் முதலாம் திகதிகளில் தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும்.

இதனால் அவ்விரு நாட்களும் தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, இன்று முதல் கடற்பரப்பு சீற்றத்துடன் காணப்படுவதுடன், காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: