வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!

Tuesday, November 1st, 2016

இன்று முதல் உக்கும் மற்றும் உக்காத குப்பைகள் என்ற அடிப்படையில் இரு வகையாக வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிப்பதற்கு அனைத்து மாநகர சபைகளும் தீர்மானித்துள்ளது.

மேற்குறித்த இந்த வேலைத் திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு வகைப்படுத்தப்படாத குப்பைகள் சேர்க்கப்பட மாட்டாது என மாகாணம் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் குப்பைகளை முறையின்றி வெளியில் கொட்டுபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் காவற்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக முப்படையினரது உதவிகளும் பெறப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை முறையின்றி கொட்டுபவர்கள் மற்றும் இடங்கள் தொடர்பான தகவல்களை119 என்ற காவற்துறை அவசர இலக்கம் மற்றும்  0112 58 71 24 , 0112 59 31 11 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக காவற்துறை சுற்றுச் சூழல் பிரிவுக்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

1-3

Related posts: