மாலைத்தீவில் இலங்கை பல்கலைக்கழக வளாகங்கள் !
Saturday, August 3rd, 2019
இலங்கைக்கான மாலைத்தீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பு உயர் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை மாலைத்தீவில் நிறுவுவது குறித்தும், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வாவும் கலந்துகொண்டார்
Related posts:
பூநகரி முழங்காவில் பகுதி காணி பதிவுகளை சீராக முன்னெடுக்கவென காணி கச்சேரியொன்றை நடாத்த திட்டம்
கொழும்பில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


