கொழும்பில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
Tuesday, December 26th, 2017
ஏ-380 எனும் பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நியூஸிலாந்தின் ஒக்லன்ட் நகரில் இருந்து துபாய் நோக்கி சென்ற போது திடீரென ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் 30000 லீற்றர் எரிபொருளை பெற்றுக் கொண்ட அந்த விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது.
இதேவேளை இந்த விமானத்தில் 400 பயணிகள் மற்றும் 30 ஊழியர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் - கடற்படைத் தளபதி!
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 40 இலட்சம் தடுப்பூசிகள் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கா...
ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது – பிரதமர் ...
|
|
|


