உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 40 இலட்சம் தடுப்பூசிகள் – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி பாலித்த அபேகோன்!

Wednesday, February 3rd, 2021

உலக சுகாதார ஸ்தாபனத்தினால், கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், AstraZeneca Covishield தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதன் முதல் தொகுதி தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் முதல் கட்டத்தில் 30 வீத தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன. எஞ்சிய கொரோனா தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: