இலங்கை அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றும் திட்டம்!

Tuesday, July 18th, 2017

நவூறு மற்றும் மானுஷ் தீவு அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றும் திட்டம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் இதனைத் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 1250 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படவிருந்தனர்

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்த திட்டம் கைவிடப்படலாம் என்று கருதப்பட்டதுஎனினும் இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், குறித்த முகாம்களில் அகதிகளை நேர்காணும் பணிகளை அமெரிக்காவின் உள்துறை செயலக அதிகாரிகள் மேற்கொண்டுவந்தனர் இருந்தபோதும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மீண்டும் அவர்கள் முகாம்களுக்கு பிரவேசிக்கமாட்டார்கள் என ஒஸ்ட்ரேலியாவின் அகதிகள் செயற்பாட்டு ஒழுங்கமைப்பின் பேச்சாளர் இயன் ரின்டோர் தெரிவித்துள்ளார்.

Related posts: