குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – கடற்படைத் தளபதி!

Tuesday, December 13th, 2016

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணைக் குழு ஒன்று விசாரணை நடத்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி அந்த இடத்தில் காணப்பட்ட பீதியான நிலைமை குறித்து செய்தி அறிக்கையிடாமை வருத்தமளிக்கின்றது.

உலகின் மூன்றாவது மிகப் பெரிய வாகனப் போக்குவரத்து கப்பல் நான்கு நாட்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்தது, அதனை விடுவித்தமைக்காக சர்வதேச கடல் அமைப்பு எனக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இலங்கை சமுத்திர ரீதியில் முக்கியமான ஓர் நாடாகும், இலங்கைக்கு வரும் கப்பல்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி என்ற ரீதியில் எனக்கு பொறுப்பு உண்டு. நான்கு நாட்களாக இந்தக் கப்பல் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை, உடனடியாக கடற்படையினர் இந்த விடயத்தில் தலையீடு செய்யவில்லை.

இரண்டு கப்பல்களையும் விடுதலை செய்யுமாறு இதற்கு முன்னதாகவும் கோரியிருந்தோம். கோரிக்கைகளை நிறைவேற்றாது கப்பல்களை விடுத்தால் வருவோரைக் கொன்று தாமும் உயிரை மாய்த்துக் கொள்வதாக அறிவித்திருந்தனர்.

இதில் எனக்கு எந்தவொரு அரசியல் நோக்கமும் இருக்கவில்லை.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் போர் வெற்றிகொள்ளப்பட்டது. அதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலுத்திலும் கடமையாற்றியிருந்தேன். நான் கடற்படையின் சார்பிலும் நாட்டின் சார்பிலுமே தீர்மானங்களை எடுக்கின்றேன்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் வழக்குத் தாக்கல் செய்தால் ஊடகங்களில் காண்பிக்கப்படாத வீடியோக்க்கள் எம்மிடமும் உள்ளன. எனது பக்க நியாயங்களையும் நான் முன்வைப்பேன். ஊடகங்கள் கூறுவதனைப் போன்று அவசரமாக பதிலளிக்க வேண்டியதில்லை என கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

raveenthira-gunaratna

Related posts: