யாழ் மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது – மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அதிர்ச்சி தகவல்!
Wednesday, December 13th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரிகளின் தகவல் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பேசி நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ளேன்.
சில இடங்களை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் – என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்...
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் – வருகின்ற...
சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகார...
|
|
|


