மானிப்பாயில் எட்டு மில்லியன் ரூபாய் செலவில் நவீன மீன் சந்தை
Tuesday, March 15th, 2016
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மானிப்பாய் மத்திய பொதுச் சந்தையின் மீன் சந்தை நவீன முறையில் புதிய இடத்தில் அமைக்கப்படவுள்ளது. நெல்சிப் திட்டத்தின் கீழ் சுமார் எட்டு மில்லியன் ரூபாய் செலவில் நவீன முறையில் இந்த மீன் சந்தை நிர்மாணிக்கப்படவுள்ளது.
சந்தைக் கட்டடத்தொகுதியில் மரக்கறி மற்றும் வர்த்தக நிலையங்களுடன் இயங்கிவந்த மீன்சந்தை இடவசதி போதாமை, சுகாதாரச் சீர்கேடுடன் என்பவற்றுடன் இயங்கி வந்தது. அயல் கிராமங்களிலிருந்து அதிகளவான மக்கள் இந்தச் சந்தைக்குத் தினம் தோறும் வருவதால் சந்தை அபிவிருத்தி செய்யப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது சந்தை அமைந்துள்ள கட்டடத் தொகுதிக்குப் பின்புறமாகவுள்ள நான்கு பரப்புக் காணியைக் கொள்வனவு செய்த மானிப்பாய் வர்த்தக சங்கம் பிரதேச சபையிடம் வழங்கியது. குறித்த காணியிலேயே புதிய மீன் சந்தை அமையவுள்ளது. இதற்கான கட்டட வேலைகள் விரைவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


