மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்!
Wednesday, July 24th, 2019
12,000 பட்டதாரிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துளார்.
அந்தவகையில் 2013 மற்றும் 2018 க்கு இடையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த அரச வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் தலையீடுகள் இன்றி 12,000 பட்டதாரிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறிய அவர் இதில் வெளிநாட்டு பட்டதாரிகளும் அடங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படவேண்டாம் - அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வலிய...
|
|
|


