மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
Thursday, January 12th, 2017
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவிகள் மீது சேட்டைகள் புரிபவர்களை கண்காணிப்பதற்கு சிவில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் மற்றும் கோட்டை பகுதிகள், பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதிகளில் சிறுவர்கள் மீதான பாலியல் சேட்டைகள், ஆபாச படம் காண்பித்தல் போன்ற சமூக சீர்கேடான விடையங்கள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது வீதியில் பிச்சை எடுப்பவர்கள் இங்காணப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பெண்கள் மீதான பாலியல் சேட்டை புரிபவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பொதுமக்கள் முறைபாட்டினை வழங்கும் பட்சத்தில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று பிச்சை எடுப்பவர்களை கட்டுப்படுத்த முடியும் என யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் பிரிவினை அமைத்தல் மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


