மாணவர்கள் மரணம் :5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!
Friday, November 18th, 2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (18) பிறப்பித்தது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் இடம்பெறுகிறது - பிரதமர் தெரிவிப்பு!
தேங்கியிருக்கும் பல்லாயிரம் கணக்கான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்து முடிக்க நடவடிக்கை - நீதி...
மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை - நுகர்வோர் கவ...
|
|
|


