மாணவர்கள் பயன்படுத்தும் குடிதண்ணீர் பகுப்பாய்வுக்கு!

Friday, August 3rd, 2018

சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் தென்மராட்சிக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாவிக்கும் குடிதண்ணீர் கிணறுகளில் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளவுள்ளதுடன்  அதற்கான நீர் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர்.

மாணவர்களால் பயன்படுத்தப்படும் கிணற்றுநீரில் பக்றீரியா பரிசோதனை மற்றும் இரசாயனவியல் பரிசோதனைகளுக்காகவே போத்தல்களில் நீர் மாதரிரிகளை எடுத்து பண்ணையில் உள்ள யாழ்ப்பாணச் சுகாதார திணைக்களப் பகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்புகின்றனர்.

குடிதண்ணீரால் மாணவர்களுக்கு நோய்கள் ஏற்படாதிருக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக தென்மராட்சி கல்வி வலயத்தில் உள்ள 54 பாடசாலைகளில் உள்ள கிணறுகளில் நீர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொடர்ந்து பொது கிணறுகள் பொதுமக்கள் பயன்படுத்தும் போது இடங்களில் உள்ள கிணறுகளிலிருந்து நீர்மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: